சூதாட்ட கிளப் நடத்தியதாக தமிழ் நடிகர் கைது!

லேசா லேசா, 12B, இயற்கை, ஏபிசிடி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் ஷாம். தற்போது நடிகர் ஷாம் வீட்டில் இரவு நேரத்தில் திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. நடிகர் ஷாம் ஒய்எம்ஆர்-ல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அவர் வீட்டில் தான் சூதாட்டம் நடந்துள்ளது, அங்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர், அங்கு சூதாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு நடிகர் ஷாம் உற்பட 13 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய சீட்டுக்கட்டுகள் மற்றும் டோக்கன்களை பறிமுதல் செய்துள்ளனர். லட்சக்கணக்கில் சூதாட்டம் நடந்ததாகவும், நேரிடையாக பணம் வைக்காமல் ஒவ்வொரு வண்ண டோக்கன்க்கு ஒவ்வொரு தொகை என மதிப்பு வைத்து சூதாட்டம் நடந்துள்ளது. இரவு 11 முதல் விடிய விடிய சூதாட்டம் நடைபெற்றதும், வெற்றி பெற்றவருக்கு கூகுள் பே மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தினமும் நடந்ததாக சொல்லப்படும் இந்த சூதாட்டத்தில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். நுங்கம்பாக்கம் போலீசார் நடிகர் ஷாம் மீது சென்னை மாநகர சூதாட்ட தடுப்பு சட்டம் 45 & 46 கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர், மேலும் சூதாட்டம் நடந்த வீட்டில் 15 வயது சிறுமி பணிப்பெண்ணாக வைத்திருந்தற்கு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் நடிகர் ஷாமை விசாரித்து வருகின்றனர். நோய் தொற்று அதிகம் பரவி வரும் சூழலில் இந்தசம்பவம் நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நடிகர் ஷாம் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tagged: , ,

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.