“பப்ஜி”  கேமிற்கு  தடை..?

இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் மேலும் 47 சீன செயலிகள் தடை செய்யப்படுவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவை ஏற்கனவே தடை செய்யப்பட்ட சீன செயலிகளின் குளோனாக செயல்பட்டது கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
புதிதாக தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகள் பட்டியல் விரைவில் முழுமையாக வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த செயலிகள் ஜூன் 29 ஆம் தேதி தடை செய்யப்பட்ட செயலிகளின் லைட் வெர்ஷன் அல்லது அதற்கான மாற்றானவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றில் டிக்டாக் லைட், ஹெலோ லைட், ஷேர்இட் லைட், பிகோ லைட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கலாம் என தெரிகிறது. தற்சமயம் இந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் கிடைப்பதில்லை. 47 சீன செயலிகள் மட்டுமின்றி 250 சீன செயலிகளுக்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த செயலிகள் பட்டியலில் அலிபாபா குழுமத்தின் பப்ஜி மொபைல் இடம்பெற்று இருக்கிறது. பப்ஜி மொபைல் கேம் தடை பரிசீலனை விவகாரம் தற்சமயம் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. தற்சமயம் தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகள் இந்திய பயனர்களின் விவரங்களை அந்நாட்டு அரசாங்கத்துடன் பகிர்ந்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.