“கே.ஜி.எஃப்-2” ட்ரெய்லர் தேதி அறிவிப்பு..!!!

கன்னடத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பிரபலமடைந்த கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னட ஆக்‌ஷன் ஸ்டார் யஷ் நடிப்பில் 2018ல் வெளியான படம் கே.ஜி.எஃப். தங்க சுரங்கத்தை மையமாக கொண்ட அனல் பறக்கு ஆக்‌ஷன் கதையாக இதை எழுதி இயக்கி இருந்தார் பிரசாத் நீல். கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியான இந்த படமும், இதன் பாடல்களும் இந்தியா முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இந்தியாவில் மட்டுமல்லாது சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது கே.ஜி.எஃப் அத்தியாயம் ஒன்று.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலர் தீவிரமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இரண்டாம் அத்தியாயத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஹம்போலே தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. “UNVEILING THE BRUTALITY” என்ற கேப்சனில் ஜூலை 29 அன்று 10 மணிக்கு முக்கிய அப்டேட் வெளியாவதாக கூறப்பட்டுள்ளது.
அதில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என்றும் குறிப்பிட்டுள்ளதால் அது படத்தின் ட்ரெய்லர் வெளியாவது குறித்த அப்டேட் என ரசிகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கே.ஜி.எஃப் இரண்டாம் அத்தியாயத்தின் ட்ரைலரை காண இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் அதுகுறித்த ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.