ஐரோப்பாவில் மீண்டும் கடுமையாகி உள்ள நோய்ப்பரவல் – உலகச் சுகாதார நிறுவனம் தகவல்

COVID-19 நோய்ப்பரவல் ஐரோப்பாவில் மீண்டும் தலைதூக்கியுள்ளது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

உலக அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் ஐந்தில் ஒரு பகுதியினர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.

கிருமித்தொற்றுக்கு பலியானோரில் மூன்றில் ஒரு பகுதியினர் அந்தக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள்.

மே மாத நடுப்பகுதியிலிருந்து புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் தினசரி எண்ணிக்கை சராசரியாக 20,000 என நிலையான அளவில் உள்ளது.

இருப்பினும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அறிவுறுத்திய உலகச் சுகாதார நிறுவனம், பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் தளர்த்தப்படுவது குறித்து அச்சம் தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.