“எனக்கு எதிராக ஒரு குழு வதந்தி பரப்புகிறது “- ஏ.ஆர்.ரகுமான் பாலிவுட் மீது பகிரங்க குற்றச்சாட்டு

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான தில் பெச்சாரா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஒரு வானொலிக்கு ஏ.ஆர்.ரகுமான் பேட்டியளித்தபோது, தமிழ் சினிமாவை விட, ஹிந்தி சினிமாவில் ஏன் குறைவான படங்களே உங்களுக்கு இசையமைக்கக் கிடைக்கிறது என கேட்டபோது,’’ ஒரு குழு எனக்கு எதிராக வதந்தி பரப்பி வருகிறது. அதனால், ஏற்பட்டுள்ள தவறான புரிதல்களே இதற்கு காரணம் என நினைக்கிறேன்’’ என ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
‘தில்பெசாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள்.
அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’ என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று
அவர், “பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன்.” – இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.