விண்வெளியில் ராணுவ சாட்டிலைட்களை அழிக்க ரஷ்யாவின் ஆயுதம்!!!….

வானிலேயே சாட்டிலைட்டுகளை தாக்கி அழிக்கும் ஆண்டி சாட்டிலைட் திட்டத்தை ரஷ்யா ரகசியமாக செயல்படுத்தி வருவதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டி இருக்கிறது. நவீன 21ம் நூற்றாணடில் ஒரு நாட்டிற்கும், இன்னொரு நாட்டிற்கும் போர் வந்தால், அதில் முக்கிய பங்கு வகிக்க போகும் விஷயமாக இருப்பது சாட்டிலைட்கள்தான். உளவு தகவல்களை சேகரிப்பது தொடங்கி, வேகமான தொலைத்தொடர்பு, படைகள் குவிப்பை கண்டறிவது என்று பல விஷயங்களுக்கு சாட்டிலைட்கள் உதவுகிறது.
ராணுவ பயன்பாட்டிற்கு என்றே தனியாக ராணுவ சாட்டிலைட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சாட்டிலைட்களை அழிக்க ரஷ்யா புதிய ஆயுதம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

ரஷ்யா ஆயுதம் :
ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிடம் சாட்டிலைட்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளது. இந்தியா இதற்காக மிஷன் சக்தி ஏவுகணைகளை சோதனை செய்து அதில் வெற்றியும் பெற்றது. சில சிறிய சிறிய சாட்டிலைட்டுகளில் லேசர் கருவுகளை பொருத்தி மற்ற சாட்டிலைட் மீது தாக்குதல் நடத்தும் திட்டங்களும் கூட போடப்பட்டு வருகிறது. ஆனால் ஒருபடி மேலே போய் ரஷ்யா இதில் புதிய சோதனையை செய்துள்ளது.

ரஷ்யாவின் சோதனை:
அதன்படி ரஷ்யா விண்வெளிக்கு சாட்டிலைட் அனுப்பி , அதன் மூலம் பிற நாட்டு சாட்டிலைட்களை அழிக்கும் சோதனையை செய்து வருகிறது. பிற நாட்டு சாட்டிலைட் அருகே சென்று, அதோடு சுற்று வட்டப்பாதையில் சுற்றி , பின் அதையே தாக்கி அழிக்கும் திட்டத்தை ரஷ்யா கையில் எடுத்துள்ளது. அதே சமயம் வெளிநாட்டு சாட்டிலைட் அருகே சென்று அதை ஹேக் செய்து, அதன் தகவல்களை திருடுவது தொடர்பான சோதனையையும் ரஷ்யா செய்து இருக்கிறது .

களமிறங்கிய ரஷ்யா:
மொத்தமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட எதிரி நாடுகளை குறி வைத்து ரஷ்யா இந்த திட்டத்தை களமிறக்கி உள்ளது. அந்த நாடுகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சண்டை வரலாம் என்று ரஷ்யா நினைக்கிறது. அதனால் இப்போதே அவர்களின் சாட்டிலைட்களை ஹேக் செய்யவும் , அழிக்கவும் ரஷ்யா இந்த அண்டி சாட்டிலைட் திட்டத்தை கையில் எடுத்துள்ளது என்று கூறுகிறார்கள்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.