வலிமை ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு..!!மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்…!

அஜித் 2019ஆம் ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என இரண்டு வெற்றித் திரைப்படங்களை கொடுத்து தற்போது வலிமை எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் படத்தினைப் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.அஜித் மட்டும் தான் நடிக்கிறார் என்பது ரசிகர்களுக்கு தெரியும்.மற்றபடி நாயகி யார் வில்லன் யார் என்பதெல்லாம் அரசல் புரசலாக வந்த செய்திகளே.
இந்நிலையில்,அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
ஆனால், அப்போது சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் அஜித் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட வேண்டாம் என தெரிவித்து விட்டாராம். ஆனால் தற்போது ஓரளவு சூழ்நிலை சாதாரணமாக மாறியுள்ளது.
இதனால் வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடலாமா என அஜித்திடம் கேட்டதற்கு பச்சை கொடி காட்டி விட்டாராம். வலிமை படம் 2021 தீபாவளிக்கு வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆயுத பூஜையை முன்னிட்டு அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. அதே தேதியில் தான் தளபதி விஜய்யின் மாஸ்டர் டிரைலர் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.