பயணத்தின் போது கொரோனா!!செலவை ஏற்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்!!!!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நிலையில், விமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் ஒருசில விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன. எனினும், கொரோனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளது.
இந்நிலையில் விமான பயணத்தின்போது கொரோனாவால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு சிகிச்சைக்கான செலவை ஏற்பதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு மருத்துவ செலவாக 1.3 கோடி ரூபாய் வரை வழங்க உள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்படும் 14 நாட்களுக்கும் தினசரி 8,691 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31, 2020 வரை எமிரேட்ஸ் விமானத்தில் பறக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை உடனடியாக பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் விமானத்தில் புறப்பட்ட நாளில் இருந்து 31 நாட்களுக்கு இது செல்லுபடியாகும் என்று விமான நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.பயணத்தின் போது கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உதவி மற்றும் பாதுகாப்பு பெற ஒரு பிரத்யேக ஹாட்லைனை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் விமான நிறுவனம் கூறி உள்ளது. இந்த மருத்துவ செலவை கோர விரும்பும் வாடிக்கையாளர்கள் மேலும் விவரங்களை எமிரேட்ஸ் இணையதளத்தில் காணலாம்.