“கருட பஞ்சமி”…..!!!

இந்த வருடம் ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமி திதி அன்று வருவது கருட பஞ்சமி என்றும், நாக பஞ்சமி என்றும் கொண்டாடுகிறார்கள்.நேற்று நாக பஞ்சமி முடிவடைந்தது.
இன்று கருட பஞ்சமியான விசேஷமான நாளில் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பர்.
கருடபஞ்சமி நன்னாளில் விரதமிருந்து கருடாழ்வாரை வணங்குவது சகல தோஷங்களையும் நீக்கும். குடும்ப ஒற்றுமையையும், திருமணத்தடை, குழந்தை பாக்கிய தடை போன்றவற்றையும் உடனே நீங்கி சுபிட்சமான ஒரு வாழ்வை தரும் என்பார்கள்.
அதிகாலை எழுந்து குளித்து முடித்து சுத்தமாக நாகர் படம், நாகம் கொண்ட கருமாரியம்மன் அல்லது சிவலிங்கம், கருடாழ்வார், பெருமாள் போன்றவர்களின் படங்களை வைத்து தேன் மற்றும் பாலை நைவேத்தியமாக படைக்க வேண்டும். உங்களால் முடிந்தவர்களுக்கு அன்ன தானம் செய்யலாம்.
விரதம் இருப்பவர்கள் மதிய பொழுதில் உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து இந்த பூஜையை செய்யலாம். முடியாதவர்கள் விரதம் இல்லாமல் சாதாரணமாக விளக்கேற்றி, தூப, தீபங்கள் காண்பித்து மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். அவ்வளவு தான் மிகவும் சுலபமான விரதமுறை தான். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். குடும்ப ஒற்றுமை கருதியும், சகோதர, சகோதரிகள் ஒற்றுமை நீடிக்கவும், பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
கருட காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே!
ஸூவர்ண பட்சாய தீமஹி!
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்.
மிகுந்த சக்தி வாய்ந்த கருடாழ்வாரை இன்றைய தினத்தில் வணங்குபவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.