இந்தியாவில் தடுப்பூசிக்கான போட்டி !!!!மனித சோதனையில் முதல் கட்ட வெற்றி!!!…..

இந்தியாவில் தடுப்பூசிக்கான போட்டி: பல்வேறு நகரங்களில் மனித சோதனை தொடங்கியது ;முதல் கட்ட சோதனைகளில் பக்கவிளைவுகள் இல்லை.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ஒரு உள்நாட்டு தடுப்பூசிக்கான போட்டி மிகுந்த ஆர்வத்துடன் நடந்து வருகிறது. பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் காடிலா ஆகிய இரு நிறுவனங்களின் தடுப்பூசி மனித சோதனைகள் தற்போது பல மாநிலங்களில் ஆறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட மூன்றாவது தடுப்பூசி விரைவில் இந்தியாவில் பரிசோதிக்கப்பட உள்ளது.. இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனெகாவுடன் இணைந்து சீரம் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்றவுடன் மனித சோதனைகளைத் தொடங்கும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கோவாக்சின், 12 நகரங்களில் எய்ம்ஸ், டெல்லி மற்றும் பாட்னா மற்றும் பி.ஜி.ஐ ரோஹ்தக் உள்ளிட்ட 12 மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
கோவாக்சின் சோதனைகள் ஏற்கனவே ஐதராபாத், பாட்னா, காஞ்சிபுரம், ரோஹ்தக் மற்றும் இப்போது டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து நாக்பூர், புவனேஷ்வர், பெல்காம், கோரக்பூர், கான்பூர், கோவா மற்றும் விசாகப்பட்டினம் உள்ளன.
முதல் கட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அனைவருமே ஆரோக்கியமானவர்கள் மற்றும் 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள்

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.