56 சட்டசபை  தொகுதிகளில் இடைத்தேர்தல்..!!விரைவில் தேதி அறிவிப்பு..!!

நாடு முழுவதும் காலியாக இருக்கும் சட்டசபைகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.அதேபோல் பீகார் சட்டசபைத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் 56 சட்டசபை இடங்கள் காலியாக இருக்கின்றன.இத்துடன் காலியாக இருக்கும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலும் நடக்கவிருக்கிறது.
இடைத்தேர்தலுக்கான தேதிகள்,எவ்வாறு தேர்தலை நடத்த வேண்டும்? போன்றவை குறித்து விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிடும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஷெபாலி ஷரண் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் ஆகிய சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கேபிபி சாமி, குடியாத்தம் எம்.எல்.ஏ. எஸ். காத்தவராயன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக கடந்த பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் உயிரிழந்தனர்.சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கொரோனா தொற்று பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்து இருந்தார்.
நாடு முழுவதும் 56 சட்டசபை தொகுதிகள், ஒரு லோக் சபா தொகுதி காலியாக இருக்கிறது. காலியாக இருக்கின்றன மத்தியப்பிரதேசத்தில் 27 சட்டசபை தொகுதிகள், குஜராத்தில் 10 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 5 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 4 தொகுதிகள் காலியாக உள்ளன. இவை அனைத்துக்கும் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் தேர்தல் நடக்குமா? என்பது விரைவில் தெரிய வரும்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.