101-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆலமரமே…!!!

மதுரையில் ஆலமரம் ஒன்றுக்கு 101வது பிறந்தநாள் கொண்டாடிய மக்கள், உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர்.
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தின் அடையாளமாக கண்மாய் கரையோரம் வீற்றிருக்கிறது அந்த ஆலமரம். மண்ணும், மரபும் மாறாத மதுரையின் அடையாளங்களில் மீனாம்பாள்புரம் மக்களின் மனதில் இடம்பிடித்த அந்த ஆலமரத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு 100வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 101வது ஸ்பெஷல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. எத்தனையோ புயல், வெள்ளம், இயற்கை இடர்பாடுகளை எல்லாம் கடந்தும் கம்பீரமாய் இன்னும் நின்று கொண்டிருக்கும் அந்த ஆலமரத்தை தான் அப்பகுதியினர் தங்களின் அடையாளமாகக் கூறுகின்றனர்.
100 ஆண்டுகளுக்கு முன் ஜூலை 23 அன்று நடப்பட்டதாக கூறப்படும் அந்த ஆலமரத்தின் பிறந்த தினத்தன்று மின் விளக்குகளால் மரத்தை அலங்கரித்து அப்பகுதியினர் திரண்டு ஏதேனும் ஒரு உறுதிமொழி ஏற்று கொள்வது வழக்கம். அந்த வரிசையில் இந்த ஆண்டு ஆலமரத்தின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா விழிப்புணர்வு மற்றும் முககவசம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நீர்நிலை இயக்கம், பாதுகாப்பு இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.
சமூக ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்பு அகற்றம் என எத்தனையோ சோதனைகளை கடந்தும் 101 ஆண்டுகளாய் கம்பீரமாய் நிற்கும் இந்த ஆலமரம் போன்று ஒவ்வொரு இயற்கையின் கொடையான மரங்களும் நூற்றாண்டுகளாய் பூமியில் வாழ்ந்தால் நாமும் அவை தரும் பயனில் நலமுடன் வாழலாம்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.