வருகிறது சாம்சங் கேலக்ஸி  எம்31எஸ்

கொரோனா பொது முடக்கத்துக்கு பின் இந்தியா சந்தையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் சேவைகள், ஆன்லைனில் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றால் ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து போன் நிறுவங்களும் புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்துகின்றனர். அந்த வகையில் முன்னணி செல்போன் நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் தங்கள் ‘கேலக்ஸி எம்31எஸ் ‘ மாடலை ஜூலை 30ம் தேதி அறிமுகபடுத்தவுள்ளது. இந்த போன் ஆ ண்ட்ராய்டு 10 இயக்கத்தளத்தில் செயல்படும். 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த போன் நீலம் மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைக்கும். முன்பக்கம் 32 எம்பி செல்ஃபி கேமராவும், பின் பக்கம் 64 எம்பி + 12 எம்பி + 5 எம்பி + 5 எம்பி என நான்கு கேமெராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரம் சார்ஜ் நிக்கக்கூடிய வகையில் 6000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ்-ம், மற்றொரு ரகத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் உள்ளது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tagged: , ,

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.