திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்..!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.இதனை ஆன்லைனில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் ஆகும். நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலம் என்று போற்றப்படும் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் நடைபெறும்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலுக்கு சிவாச்சாரியார்கள் சென்று வழக்கமான வழிபாடுகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) விநாயகர் வழிபாடு, யாகசாலை பூஜை நடைபெற்றது.அம்மன் சன்னதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து 10 நாட்கள் விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.
விழா நிகழ்ச்சிகளை ஆன்லைனில் ஒளிபரப்ப கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.