கொரோனா நெகடிவ் போலி ரிப்போர்ட் – டாக்டர் கைது

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமலே ‘கொரோனா நெகடிவ்’ என ரிப்போர்ட் கொடுத்ததாக அம்மருத்துவமனையின் இயக்குனரும், டாக்டருமான முகமது ஷஹீத் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா அறிகுறிகளுடன் வருவோருக்கு அரசின் அனுமதி பெற்ற சோதனை மையம் என்று கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு, சோதனை செய்யாமலே போலியாக ‘கொரோனா நெகடிவ்’ என சான்றிதழ் வழங்கியுள்ளார். அந்நாட்டு சுகாதாரத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அதிகாரிகள் அம்மருத்துவமனையில் சோதனை நடத்தினர். அதில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 4000 பேருக்கு முறையான பரிசோதனையும், 6000த்திற்கு மேற்பட்டோருக்கு பரிசோதனையே செய்யாமல் போலி ‘கொரோனா நெகடிவ்’ சான்றிதழ் வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து டாக்டர் முகமது ஷஹீத் கைது செய்வதற்குள் தலைமறைவானார். போலீஸ் தீவிர தேடலுக்கு பின் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படியுங்கள்
கொடை வள்ளல்

ட்ரெண்டிங் நியூஸ்
செய்திகள் நொடிகளில்
- சூதாட்ட கிளப் நடத்தியதாக தமிழ் நடிகர் கைது! July 28, 2020
- ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன் July 28, 2020
- பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு…!!! July 28, 2020
- ‘ஆன்லைன்’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு…!!! July 28, 2020
- மீண்டும் “டொனால்டு டிரம்ப்”….. July 27, 2020
விளம்பரம்

வீடியோஸ்
சமூகப்பார்வையில் ஊடகம் – வீடியோஸ்
விளம்பரம்
