பலாக்காய் பிரட்டல்…!!!

தேவையான பொருட்கள்:
பலாக்காய் – 1
தேங்காய் – 1/2 மூடி
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2 பெரியது
பூண்டு – 5 பல்
மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
பட்டை -சோம்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பலாக்காயைத் தோல் நீக்கி சிறிதாக வெட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெங்காயம்,தக்காளியை வெட்டிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றிப் பட்டை சோம்புப் போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு வதக்கி பலாக்காயைப் போட்டு நன்றாககக் கிண்டி பின், மிளகாய்த்தூள் போட்டு தண்ணீர் வேண்டிய அளவு விட்டு வேகவிடவும். காய் வெந்தவுடன் உப்புப் போட்டு தேங்காய்த் துருவலை நைசாக அரைத்து அதில் போடவும். தண்ணீர் இல்லாமல் வந்தவுடன் மசாலாவாக எடுக்கவும். கெட்டியாக இருக்க வேண்டும்.