தனியார் துறை நிறுவனங்களை இணைக்கும் நோக்கில் அரசின் சார்பில் வேலைவாய்ப்பு!!!

வேலை நாடும் இளைஞர்களையும் தனியார் துறை நிறுவனங்களையும் இணைக்கும் நோக்கில் அரசின் சார்பில் வேலைவாய்ப்பு இணையதளத்தில் கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாகவே வெளியானது.இதில் 6௦௦௦ வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியானது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில், தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து, வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ ‘Tamil Nadu Private Job portal’ (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களின் கல்வித் தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணி வாய்ப்புகளை பெறுவதற்கும், நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடவும் பணி நியமனம் செய்வதற்கும் இந்த இணையதளம் வழிவகை செய்யும்.
தற்போதைய சூழ்நிலையில், இதற்கு மாற்றாக ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ மூலம், இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டிலுள்ள வேலைநாடும் இளைஞர்களை, இணைய வழியாக தொடர்பு கொண்டு, தனியார் துறை வேலையளிப்போர்கள் பணி வாய்ப்புகளை அளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது”

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.