சீனாவின்  ‘தியான்வென்-1’ விண்கலம்..!!!

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனா “தியான்வென்-1” என்ற விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகள் விண்கலத்தை செலுத்தியுள்ளது. இந்தியா சந்திராயன் என்ற விண்கலத்தை ஏவியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் விண்கலத்தின் கால் பதிப்பதற்கு முன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முயற்சி தோல்வியடைந்தது.
கடந்த 20-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியது. ஜப்பானில் இருந்து இந்த விண்கலம் செயற்கைக்கோள் மூலம் ஏவப்பட்டது.
இந்நிலையில் சீனா “தியான்வென்-1” என்ற விண்கலத்தை இன்று ஹைனன் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து ஏவியது. “லாங் மார்ச் 5” என்ற சீனாவின் மிகப்பெரிய ராக்கெட் மூலம் ஹைனன் தீவிலிருந்து இன்று ஏவப்பட்டது. 36 நிமிட பயணத்திற்குப் பிறகு புவி-செவ்வாய் மாற்று சுற்றுவட்ட பாதையை அடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மண்ணை ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், ஒரு லேண்டர், மற்றும் ஒரு ரோவர் கருவிகளைக் கொண்டுள்ளது. இது 5.5 கோடி கிலோ மீட்டரை 7 மாதம் பயணித்து பிப்ரவரி 2021-ல் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.
சீனா ஏற்கனவே 2011-ம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. தற்போது சொந்தமாக விண்கலத்தை அனுப்பியுள்ளது.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.