இந்திய வம்சாவளி பெண் நர்சுக்கு சிங்கப்பூரில் ஜனாதிபதி விருது!!!!…..

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை நீயே தேடு…
என்று சொல்லும் வகையில் தனக்காக பாதையை தேர்ந்தெடுத்தார் கலா நாராயணசாமி…..

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நர்ஸ் ஒருவருக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னின்று போராடியதற்காக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நர்ஸ் ஒருவருக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.
59 வயதான கலா நாராயணசாமி தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பயன்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

கலா நாராயணசாமியுடன் சேர்த்து மொத்தம் 5 நர்சுகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் அந்நாட்டின் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் கையெழுத்திட்ட சான்றிதழ், கோப்பை மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம்) சன்மானமாக வழங்கப்பட்டது.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.