+2 தேர்வில் சாதித்துக்காட்டிய குடுகுடுப்பை சமூக மாணவி தேவயானி.

மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் மலைபகுதிக்கு பின்புறம் அமைந்துள்ளது தென்பரங்குன்றம்.
இங்கு பழங்குடியின மக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.நான்கு பெண் பிள்ளைகளுடன் பிறந்த மாணவி தான் தேவயானி.
இவர் திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி 12ம் வகுப்பில் 500/600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.சாப்பாட்டிற்கே வழியில்லாத இந்த மாணவி டியூசன் படிக்க கூட வழியில்லாமல் வீட்டில் இருக்கும் காண்டா விளக்கு, தெருவிளக்குகளில் படித்து தன் சமூக மக்களை தட்டி எழுப்பியிருக்கிறார். தன் தந்தை குடுகுடுப்பு குறி சொல்வதன் மூலம் வரும் வருமானத்தை கொடுத்தால் தான் வீட்டில் அடுப்பு எரியும்.அப்பதான் கஞ்சி குடிக்க முடியும்.
இப்படிபட்ட பிள்ளைகள் தான் வெறிதனத்தோடும் ஆர்வத்தோடும் கல்வி கற்று வருகிறார்கள்.காரணம், கல்வி மற்றும் அரசு அதிகாரம் ஒரு சமூகத்தின் தலையெழுத்தை மாற்றும் அல்லது குடிசை வீட்டை கோபுரமாக்கும் என்பது தான் உண்மை.
தேவயானியின் வீட்டிற்கு சென்ற எம்எல்ஏ.டாக்டர் .சரவணன் அந்த மாணவியை கவுரப்படுத்தியதோடு கல்லூரிப்படிக்கான அனைத்து செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் அவருக்கு தேவையான சாதி சான்றிதழ் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றுத் தருவதற்கான முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார்.
இது குறித்து திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ.டாக்டர்.சரவணம் பேசும் போது..” இதுபோன்று தமிழகத்தில் ஏராளமான மாணவர்கள் இருக்கலாம்.என்னைப்போன்ற எம்எல்ஏக்கள் , எம்பிக்கள்,செல்வந்தர்கள், தன்னார்வலர்கள் அவர்களை அடையாளம் கண்டு மேற்கல்வி அளித்து நாம் தான் கைதூக்கிவிட வேண்டும். அந்த மாணவியின் மேற்படிப்பு படிப்பதற்கான அனைத்து செலவுகளையும் நானே ஏற்றதோடு இல்லாமல், கல்லூரியில் இடம்பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்கிறார்.
தேவயானி போன்று இந்தியாவில் எத்தனை தேவயானியோ…? இது தான் இந்தியாவின் இன்னொரு முகம். சிறுபான்மையின மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளில் இவரைப்போல் நிறைய விடிவெள்ளிகள் இருட்டில் முடங்கியிருக்கலாம்…..

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.