பொன் பொருளை அள்ளித்தரும் மூன்றாம் பிறை தரிசனம்…!!!!

பொதுவாகவே மூன்றாம் பிறை தரிசனம் என்பது நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியது. அவ்வளவு எளிதாக யார் கண்ணிற்கும், இந்த மூன்றாம் பிறை தரிசனம் புலப்படாது என்றே சொல்லலாம். இருப்பினும் எப்படியாவது இந்த, பிறை தரிசனத்தை பார்த்து விடவேண்டும் என்று முயற்சிசெய்து, பார்ப்பவர்கள் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் குறிப்பிட்டு, இந்த ஆடி மாதம் மூன்றாம் பிறை தரிசனத்தை யாரும் தவற விட்டு விடாதீர்கள்! காரணம், அம்மனுக்கு உகந்த இந்த மாதத்தில், சிவபெருமான் தலையில் சூடிக் கொண்டிருக்கும் பிறை நிலவை நாம் காண்பது, நமக்கு இரட்டிப்பு பலனை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
சந்திர பகவானை தரிசனம் செய்வதற்கு முன்பாக, மாலை வேளையில் ஒருமுறை,குளிக்க வேண்டியது அவசியம். சந்திர பகவானின் உதயத்திற்கு முன்பு, அதாவது 6 மணிக்கு முன்பாகவே வீட்டு பூஜை அறையை, பூஜை செய்வதற்கு தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.மாலை 6 மணிக்கு, உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பின்பாக, சந்திர தரிசனத்திற்கு தயாராகுங்கள்.
சந்திர பகவானை தரிசனம் செய்வதற்கு முன்பாகவே, உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு தங்க நகை, ஒரு ரூபாய் நாணயம் இவை இரண்டையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சந்திரனை பார்க்கும்போது தங்க ஆபரணத்தையும், ஒரு ரூபாய் நாணத்தையும், உள்ளங்கைகளில் வைத்து அதன் பின்பு சந்திர பகவானை தரிசனம் செய்ய வேண்டும்.
இப்படி சந்திரபகவானிடம் வேண்டுதல் வைக்கும் போது நம் வீட்டில் இருக்கும் பொன், பொருள், தனம் தானியத்திற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது.மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தை முடித்துவிட்டு, வீட்டிற்குள் வந்து சந்திர பகவானை முழுமையாக வேண்டிக்கொண்டு, பச்சைப் பயிரினால் செய்யப்பட்ட நெய்வேத்தியத்தை சந்திரனுக்கு படைத்து, உங்களது பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். இப்படி செய்யும்பட்சத்தில் சந்திரனின் அருளாசியை முழுமையாகப் பெற்று, எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் வளமான வாழ்க்கையைப் பெறலாம்.