டீ  குடித்ததும் கப்பை சாப்பிடுங்க…!!!!

பிளாஸ்டிக் ஒழிப்பு, கொரோனா வைரஸ் தொற்றை கையாள்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சாக்லேட் தேனீர் கோப்பையை தயார் செய்துள்ளார் மதுரையில் டீக்கடை நடத்தி வரும் விவேக் சபாபதி.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைசெய்துள்ளது. அதேபோல் டீ கடையில் பயன்படுத்தப்படும் பேப்பர் கப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்ணாடி டம்ளர் அல்லது சில்வர் டம்ளரில்தான் டீ விற்கப்பட்டு வருகிறது.
இதனால் ஒருவர் குடித்த டீ டம்ளரை மீண்டு கழுவி உபயோகப்படுத்த வேண்டும். தற்போது கொரோனா காலம் என்பதால் ஒருவர் பயன்படுத்திய டம்ளரை மற்றவர் பயன்படுத்த அஞ்சுகின்றனர். இதனால் மதுரையில் கியோஸ்க் என்ற பெயரில் சிறிய டீக்கடை நடத்தி வரும் விவேக் சபாபதி என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
ஐஸ்கிரீம் சாப்பிடும்போது அதனுடைய பிஸ்கட் கப்பையும் சேர்த்து சாப்பிடுவது போன்று, டீ குடிக்கும்போது நொறுக்குத்தீனி போன்று கோப்பையையும் மென்று அருந்தினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார்.
இதனால் சாக்லெட்டால் தேனீர் கோப்பையை வடிவமைத்தார். இந்த சாக்லேட் கோப்பை சுமார் 10 நிமிடங்கள் தேனீர் சூட்டைத் தாங்கும். அதற்குள் மக்கள் டீயை குடித்து விடுவார்கள் என்பதால் அதுபோன்று வடிவமைத்தார்.
கடந்த மாதம் 15-ந்தேதி அந்த கோப்பையை அறிமுகப்படுத்தினார். அறிமுகமான முதல் நாளில் 500 டீ விற்பனையாகியுள்ளது. கோப்பையுடன் டீ-க்கு 20 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் நொறுக்குத்தீனியுடன் டீ அருந்திய மகிழ்ச்சியில் செல்கின்றனர். ஊரடுங்கு மட்டும் தற்போது இல்லை என்றால் கூடுதலாக டீ விற்பனையாகும் என்கிறார் சபாபதி. சபாபதியின் சிறந்த யோசனைக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.