இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகிபாபு….!!!!

இன்று காமெடியன் யோகி பாபுவின் பிறந்தநாள். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.தற்சமயம் தமிழ் சினிமாவில் காமெடியன்களாக கலக்கும் நடிகர்களை பட்டியலிட்டால் அதில் முதலிடம் நிச்சயம் யோகி பாபுவுக்கு தான் இருக்கும். அந்த அளவுக்கு பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் மட்டுமின்றி பல சிறிய பட்ஜெட் படங்களிலும் காமெடியனாக தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் 2009ல் வெளிவந்த யோகி என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படத்தின் பெயர் தான் தற்போது அவரது பெயருடன் இணைந்து இருக்கிறது.
யாமிருக்க பயமே படத்தில் பன்னி மூஞ்சி வாயன் காமெடி,அதற்குப் பிறகு மான் கராத்தே வவ்வால் காமெடி, காக்கி சட்டை பிச்சைக்காரன் காமெடி என யோகி பாபுவின் காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்காத யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது.
பொதுவாகவே உருவத்தைப் பற்றி மோசமாக விமர்சித்து அதிக அளவில் காமெடிகள் தமிழ் சினிமாவில் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன.அப்படி தன்னுடைய உருவத்தை கேலி செய்யும் ஒரு விஷயத்தை தனக்கு சாதகமாக மாற்றி அதையே தன்னுடைய வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டவர் யோகி பாபு. அவர் திரையில் வந்தாலே ரசிகர்களுக்கு சிரிப்பு வரும் அளவுக்கு அனைவரையும் ஈர்த்து இருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடித்துள்ள காக்டெயில் என்ற படம் நேரடியாக ஓடிடி இணையதளத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வரும் 4 கதாபாத்திரங்களில் ஒருவராக யோகி பாபு நடித்திருந்தார்.