வாழைப்பூ வடை..!

தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – 1
துவரம்பருப்பு – 100 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 3
பூண்டு – 10 பல்
மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன்
தேங்காய்ப்பூ – 1/4 மூடி
சோம்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 1/4 கிலோ
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் முதலில் ஊறவைக்க வேண்டும். ஊறியபின் நெறுநெறுவென அரைக்க வேண்டும். வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக அரிந்து அதை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவிட்டு எடுக்கவும். அரிந்து வைத்துள்ள பூவோடு சோம்பு பூண்டு பருப்போடு அரைக்கவும். தேங்காய்ப்பூவை அரைத்து மாவுடன் சேர்க்கவும். வெங்காயத்தை மாவில் சேர்த்து எல்லாவற்றையும் கெட்டியாகப் பிசைந்து உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும். அடுப்பில் வாணலியை போட்டு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய வடைகளாக தட்டிப்போட்டு சிவப்பாக வந்ததும் எடுக்கவும்.