பாதுகாப்புதுறை அமைச்சர் லடாக் பயணம்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ளார். இதன் முதற்கட்டமாக அவர் விமானம் மூலம் இன்று காலை லடாக்கின் லே விமானநிலையம் சென்று இறங்கிய அவர், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் நரவானே ஆகியோருடன் ஸ்டக்னா என்ற முன்களப்பகுதிக்கு சென்றார் அங்கு நம் ராணுவ வீரர்கள் பாராஷூட் மூலம் குதித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தி அவருக்கு மரியாதை செலுத்தினர். அங்கு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பற்றி ராஜ்நாத் சிங்கிற்கு விளக்கப்பட்டது. கண்காணிப்பு பணியில் பயன்படும் ரோந்து கெலிகாப்டர்களையும் பார்வையிட்டார். பின் ராணுவம் பயன்படுத்தும் டி-90 டாங்குகள், BMP பீரங்கி மற்றும் கவச வாகனங்களில் நம் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதை பார்வையிட்டார். இன்று லடாக்கில் தன் ஆய்வை முடித்துக்கொண்டு நாளை ஜம்மு-காஷ்மீர்-ல் எல்லை நிலவரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் அண்மையில் நம் பாரத பிரதமர் மோடி லடாக்கின் முன்களப்பகுதிக்கு சென்று அங்கு நம் ராணுவ வீரர்கள் முன் உரையாற்றினார் என்பது குறிப்பிட தக்கது

Tagged: , ,

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.