கேப்டன் ஆப் அமெரிக்கா ஷீல்டு  பெரும் வீர சிறுவன்

வியோமின் மாகாணத்தில் செயேனி நகரில் கடந்த ஜூலை 9-ம் தேதி தெருவில் நடந்து கொண்டறிந்தபோது 4 வயது சிறுமியை ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று கடிக்க பாய்ந்துள்ளது . அப்போது நாயின் குறுக்கே பாய்ந்த சிறுமியின் 6 வயதான அண்ணன் பிரிட்ஜ்ர் வாக்கர் நாயுடன் கடைசி வரை போராடி தன் தங்கையை மீட்டான். இப்போராட்டத்தில் சிறுவனின் முகத்தில் நாய் பல இடங்களில் கடித்துள்ளது, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு 2 மணி நேர அறுவை சிகிச்சை முடிந்து தீவிர கண்காணிப்பு காரணமாக உயிருடன் வீடு திரும்பினான். அச்சிறுவனின் முகத்தில் 90 தையல்கள் போடப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து தன் தந்தையிடம் பேசும்போது எங்கள் இருவரில் யாராவது ஒருவர் பலியாக வேண்டும் என்றால் அது நானாகத்தான் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளான். இச்சிறுவனின் அத்தை நிக்கி வாக்கர் தன் இன்ஸ்டாகிராம் பக்கதில் சிறுவன் முகக்காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “எங்கள் வீட்டு ஹீரோ இவன்தான், கோரமுகம் காட்டிய நாயிடமிருந்து தன் தங்கையை காப்பாற்றி கையில் தூக்கி கொண்டு உயிர்தப்பித்தவன், தற்போது 90 தையல்களுடன் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறான். முக காயங்களால் அவனால் சரியாக சிரிக்க கூடமுடியவில்லை. ஆனால் பிரிட்ஜ்ர் வாக்கரின் மனம் அழகானது. எங்கள் வீட்டின் துணிச்சலான ஹீரோ பற்றி அனைத்து சூப்பர் ஹீரோக்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். வாக்கர் செயலுக்காக அவனுக்கு குவிந்து வரும் பாராட்டுகள் மற்றும் கருத்துக்கள் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரல் ஆனது. பல பிரபலங்கள் சிறுவனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அவெஞ்சர் நாயகன் கிறிஸ் இவான்ஸ் சிறுவனுக்கு ஒரு வீடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார், அதில் “உன்னை போன்ற ஒருவனை அண்ணணாக உன் தங்கை கொடுத்துவைத்திருக்க வேண்டும், உன் பெற்றோர்கள் உன்னை பெற்றதற்காக பெருமை அடைவார்கள், என்னிடத்தில் உள்ள கேப்டன் ஆப் அமெரிக்கா ஷீல்டு உனக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஹாலிவுட் நடிகை அன் ஹாதவே மற்றும் பல ஹாலிவுட்

Tagged: , ,

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.