கோவை கலெக்டருக்கு கொரோனா !

கோவை கலெக்டர் கே. ராஜாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு திங்கள் முதல் லேசான தொண்டை புண் மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து செவ்வாய் கிழமை கோவை மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இன்று அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகம் மற்றும் அவர் பயன்படுத்திய அறைகள் கிருமிநாசிகள் தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்று நாட்களாக கலெக்டர் சந்தித்த நபர்கள் விவரங்கள் சேகரித்து, அவர்களுக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.

Tagged: , ,

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.