குழந்தைகளை பாதுகாக்கும் “சேவ் தி சில்ட்ரன் “

பொருளாதார சரிவு காரணமாக “சேவ் தி சில்ட்ரன்” அமைப்பு குழந்தைகளை பாதுகாக்க களம் இறங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பொது மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதேபோல் உலகம் முழுக்க குழந்தைகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இதனால் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்த லாக்டவுன் காரணமாக குழந்தைகள் தங்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுடன் சரியாக பழக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் மொத்தம் 39% குழந்தைகள் இருக்கிறார்கள். முக்கியமாக கொரோனா காலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் குழந்தைகளை கட்டாயமாக பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்த பணியை சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 27, 2020 வரை நாடு முழுக்க 3640 வீடுகளில் சேவ் தி சில்ட்ரன் அமைப்பு மூலம் உணவு பொருள்கள், சுகாதார பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. 46000 குடும்பங்களுக்கு அடிப்படை சுகாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா குறித்த விழ்ப்புணர்வையும் இந்த அமைப்பு செய்துவருகிறது. இந்த அமைப்பின் செயல்களை அனைவரும் பாராட்டியும், தங்களால் ஆன உதவிகளையும் செய்து வருகிறன்றனர்.
good