ஆடி மாதம், தினம்தோறும் அம்மன் வழிபாடு செய்தால் நன்மைகள் பல :

ஒரே ஒரு, நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி, பூஜை அறையில் வைத்து விட்டு, உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டத்தை அம்பாளின் முன் வைத்து விடுங்கள். தீராத துன்பம் என்று உங்களுக்கு எது இருக்கின்றதோ அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று முதலில் மனதார வேண்டிக்கொண்டு, பின்வரும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
ஓம் சர்வ சக்தி தாயே போற்றி!’
ஒருவரி மந்திரம் தான்! ஆனால் சக்தி வாய்ந்த மந்திரம் இது. ஆடி மாதம் முழுவதும் காலையில் அம்மனை மனதார நினைத்து 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு, உங்களது விரதத்தை தொடங்குங்கள். விரதம் என்றால் கடுமையான விரதம் இல்லை. ஒரு வேளை மட்டும், காலை ஒரு வேளை மட்டும், உணவு அருந்தாமல், பழம் பால் சாப்பிட்டுவிட்டு, இந்த விரதம் இருப்பது மிகவும் நல்ல பலனைத் தரும்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.